இடுகைகள்

ஏப்ரல், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆத்திசூடி - ஔவையார் - 101-108

ஆத்திசூடி - ஔவையார் - 13ஆம் நூற்றாண்டு நீதிநூல் நவீனப் பொழிப்புரை வீடு பெற நில் யாருக்கும் அடிமையாய் இராதே. உன் சுதந்திரத்தை எப்போதும் பாதுகாத்து வைத்திரு. உத்தமனாய் இரு உடல், உள்ளம், செயலில் மிகத் தூயவனாக இரு. ஊருடன் கூடி வாழ் எல்லோரிடமும் அனுசரித்து வாழப் பழகு. மேட்டிமைத்தனம் காட்டாதே. வெட்டேனப் பேசேல் யாரையும் எடுத்தெறிந்து பேசாதே. தன்மையாகப் பேசு. வேண்டி வினைசெயேல் பலனை எதிர்பார்த்து ஒரு செயலைச் செய்யாதே. செயலின்பதுக்காகச் செயல் செய். வைகறைத் துயிலெழு அதிகாலையில் தூக்கம் விட்டெழு. ஒன்னாரைத் தேறேல் உன் தன்மைக்கு இணங்காதவரை நட்பு பாராட்டத் தேர்ந்தெடுக்காதே.   ஓரம் சொல்லேல் புறம் பேசாதே.

ஆத்திசூடி - ஔவையார் - 86-100

ஆத்திசூடி - ஔவையார் - 13ஆம் நூற்றாண்டு நீதிநூல் நவீனப் பொழிப்புரை போர்த்தொழில் புரியேல் பிறர் மீது வன்முறை செலுத்துவதைத் தொழிலாகக் கொள்ளாதே.   மனம் தடுமாறேல் நிலையான மனம் கொள். குழப்பத்தில் தடுமாறாதே. மாற்றானுக்கு இடம் கொடேல் உன் வாழ்க்கையின் முடிவுகளைப் பிறர் எடுக்க அனுமதிக்காதே. உன் வாழ்க்கை உன் கையில். மிகைபடச் சொல்லேல் நீ செய்தவற்றைப் பெருமைபடுத்திச் சொல்லாதே. மீதூண் விரும்பேல் அதிகம் உண்ணாதே. அரை வயிறுக்கு உண். முனைமுகத்து நில்லேல் முன்கோபம் கொண்டு உடனடியாக எதிர்வினை ஆற்றாதே. பொறுமையைக் கடைபிடி. மூர்க்கரோடு இணங்கேல் முரடர்களோடு பழகாதே. அவருக்குப் பயந்து நடக்காதே. மெல்லினலாள் தோள் சேர் நற்பண்புடைய பெண்ணுடன் வாழ். மேன்மக்கள் சொற்கேள் சான்றோர் பேச்சைக் கேள். மைவிழியார் மனையகல் பசப்பு மொழிகள் பேசும் பெண்டிரோடு சேராதே. மொழிவது அறமொழி சொல்வதை அழுந்தந்திருத்தமாகச் சொல். மோகத்தை முனி புறவுலக ஆசைகளின் மீது கவனம் வைக்காதே. முனி என்றால் ஒதுக்குதல் என்று பொருள். வல்லமை பேசேல் வாய்ச் சவடால் விடாதே. வாது முற்கூறேல் உன்னுடைய வாதங்களை முதலில் எடுத்து வைக்காதே. எதிரியின் வாதங்களுக்குத் தக்க பத...

ஆத்திசூடி - ஔவையார் - 76-85

ஆத்திசூடி - ஔவையார் - 13ஆம் நூற்றாண்டு நீதிநூல் நவீனப் பொழிப்புரை நோய்க்கு இடம் கொடேல் நோய் என்றால் அச்சம் என்று பொருள். உன் வாழ்க்கையில் அச்சத்திற்கு இடம் தராதே. எதையும் தைரியமாக எதிர்கொள். பழிப்பன பகரேல் ஒன்றுக்கும் உதவாத சொற்களைப் பேசாதே. பேசினால் பிறரால் இகழப்படுவாய். பாம்பொடு பழகேல் காரியம் சாதிப்பதற்காக மட்டும் உன்னைப் பயன்படுத்த நினைப்பவர்களுடன் பழகாதே. பாம்புக்கு இரை மட்டுமே குறி. சுயநலமிகளுக்கு தன்னலம் மட்டுமே இலக்கு. பிழைபடச் சொல்லேல் சொல்ல வந்ததைத் தெளிவாக, சுருக்கமாகச் சொல். பொருள் மாற்றிச் சொல்லாதே. பீடு பெற நில் சபையின் முன்னால் கைதட்டுபவனாக இருக்காதே. பாராட்டப்படுபவனாக இரு. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் உலகம் புகழும் சான்றோரை நீயும் அடியொற்றி வாழக் கற்றுக் கொள். சான்றோர் சொல் தவறாதே. பூமி திருத்தியுண் உழவு செய்து உண்டு வாழ். பெரியாரைத் துணைகொள் வாழ்வில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது அனுபவம் வாய்ந்தவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடு. தன்னிச்சையாக, அவசரத்தில் முடிவெடுக்காதே. பேதைமை அகற்று கல்வி கற்றுக் கொள். கல்லாமல் நில்லாதே. பையலோடு இணங்கேல் சிறுமதியாளர்களுடன் சேர்க்கை வைத்...

ஆத்திசூடி - ஔவையார் - 61-75

ஆத்திசூடி - ஔவையார் - 13ஆம் நூற்றாண்டு நீதிநூல் நவீனப் பொழிப்புரை தெய்வம் இகழேல் விதியைப் பழித்துப் பேசாதே. இறைவன் வகுத்ததை ஏற்றுக் கொள்வதே நெறி. தேசத்தோடு ஒத்து வாழ் அண்டை நாட்டினரோடு நட்பு பாராட்டு. அவர்களுடன் சண்டையிடாதே. தையல் சொல் கேளேல் புனைந்து சொல்லப்படும் கருத்துகளைச் செவிமடுக்காதே. உண்மையை ஆராய்ந்து பார்த்து ஏற்றுக் கொள். தொன்மை மறவேல் நீ பிறந்த தேசம், குடி, மொழி ஆகியவற்றின் தொல்பெருமையை ஒருபோதும் மறக்காதே. தோற்பன தொடரேல் நீ செய்யும் முயற்சி தொடர்ந்து தோல்வியடைந்தால், அதைச் சற்று இடைநிறுத்து. தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து தெளிந்த பின் மீண்டும் சரியான முறையில் தொடங்கு. நன்மை கடைபிடி நற்செயல்களைச் செய்வதை விட்டுவிடாதே. தொடர்ந்து செய். நாடு ஒப்பன செய் நாட்டிலுள்ளோர் ஏற்கக்கூடிய செயல்களையே செய். ஊராருக்கு எதிராக எதையும் செய்யாதே. நிலையிற் பிரியேல் கொண்ட கொள்கையில் உறுதியாக இரு. நீர் விளையாடேல் கடலில் நீந்தி விளையாடாதே (அதா.) வாழ்க்கை என்னும் கடலில் விளையாட்டுத்தனமாக இறங்காதே. நுண்மை நுகரேல் எதையும் மிகுதியாக உண்ணாதே, அருந்தாதே. எதையும் அளவோடு ருசி. நூல் பல கல் மூத்தோர் இயற்றிய ச...