இடுகைகள்

ஜூலை, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 75 - 81

75. பழியா வருவது மொழியாது ஒழிவது தீமை பயக்கும் சொற்களைப் பேசாமல் தவிர்த்தல் நலம். 76. சுழியா வருபுனல் இழியாது ஒழிவது சுழித்து வரும் நீரோட்டத்தில் இறங்காமல் இருப்பது நலம். 77. துணையோடு அல்லது நெடுவழி போகேல் தொலைவான இடத்திற்குத் துணையின்றிப் போகாதே. 78. புணைமீது அல்லது நெடும்புனல் ஏகேல் படகு மீது ஏறாமல் பெரிய நீர்நிலையைக் கடக்க முயலாதே. 79. எழிலார் முலைவரி விழியார் தந்திரம் இயலா தனகொடு முயல்வா காதே உன்னால் இயலாத காரியத்தைக் கன்னியர் மேல் கொண்ட காதல் பெருக்கில் செய்ய முயலாதே. 80. வழியே ஏகுக வழியே மீளுக நேர்வழி சென்று அவ்வழியிலேயே திரும்பு.  81. இவைகா ணுலகிற்கு இயலா மாறே மேற்குறிப்பிட்ட எல்லாமும் இவ்வுலகத்தில் சிறப்புடன் வாழும் வழிகளாம். *****வெற்றி வேற்கை முற்றிற்று*****

வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 66 - 74

 66. முதலுள பண்டம்கொண்டு வாணிபம் செய்து அதன்பயன் உண்ணா வணிகரும் பதரே முதலீட்டுக்குச் செல்வம் இருந்தும் அதைக் கொண்டு வணிகம் செய்யாத வியாபாரியும் வீணனே 67. வித்தும் ஏரும் உளவாய் இருப்ப எய்த்துஅங்கு இருக்கும் ஏழையும் பதரே விதையும், நிலமும் தயாராக இருந்தும் வெறுமனே சோம்பி இருக்கும் விவசாயியும் வீணனே. 68. தன்மனை யாளைத் தாய்மனைக்கு அகற்றிப் பின்பவள் பாராப் பேதையும் பதரே இல்லத்தின் இலக்குமியை அவள் பிறந்த வீட்டுக்குத் துரத்திவிட்டு பாராமாமுகத்துடன் இருப்பவனும் வீணனே. 69. தன்மனை யாளைத் தனிமனை இருத்தி பிறமனைக்கு ஏகும் பேதையும் பதரே வீட்டில் இல்லத்தரசி இருக்க இன்னொரு மனையில் பெண் தேடிச் செல்லும் முட்டாளும் வீணனே. 70. தன்னா யுதமும் தன்கைப் பொருளும் பிறன்கைக் கொடுக்கும் பேதையும் பதரே தனக்கு இயல்பில் வாய்த்த திறன்களையும் செல்வத்தையும் பிறருக்குக் கொடுக்கும் மூடனும் வீணனே. 71. வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும் சாற்றுவது ஒன்றைப் போற்றிக் கேண்மின் சொற்களைப் பறை போலவும், நாக்கை சவுக்கு போலவும் பயன்படுத்திச் சான்றோர் சொல்லும் சொல்லை தட்டாது கேட்க வேண்டும். 72. பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய்போ...

வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 58 - 65

 58. நல்ல ஞாலமும் வானமும் பெறினும் எல்லாம் இல்லை இல்லில் லோர்க்கே நற்சுற்றமும், நட்பும், சொத்தும், சுகமும் இருந்தாலும் மனைவி இல்லாதோர்க்கு எல்லாம் இருந்தும் எதுவும் இருக்காது. 59. தறுகண் யானை தான்பெரி தாயினும் சிறுகண் மூங்கிற் கோற்கஞ் சும்மே எதற்கும் அஞ்சாத யானையும் பாகன் கையிலிருக்கும் சிறு மூங்கில் அங்குசத்திற்கு அஞ்சி நடுங்கும். 60. குன்றுடை நெடுங்காடு ஊடே வாழினும் புன்றலைப் புல்வாய் புலிக்கஞ் சும்மே உயர்ந்த குன்றுகள் நடுவே செறிந்த காட்டில் வாழும் மானும் அங்கிருக்கும் புலியினைக் கண்டு அஞ்சும். 61. ஆரையாம் பள்ளத்து ஊடே வாழினும் தேரை பாம்பிற்கு மிகஅஞ் சும்மே புற்செறிந்த புதருக்குள்ளே வாழும் தேரையும் அங்குய்யும் பாம்புக்கு அஞ்சும். 62. கொடுங்கோன் மன்னர் வாழும் நாட்டிற் கடும்புலி வாழும் காடு நன்றே கொடுங்கோல் அரசன் ஆட்சிபுரியும் நாட்டில் அடிமையாய் வாழ்வதை விட, கொலைப் புலி வாழும் காட்டில் சுதந்தரமாய் வாழ்வது நன்று. 63. சான்றோர் இல்லாத் தொல்பதி இருத்தலின் தேன்தேர் குறவர் தேயம் நன்றே படித்த பண்புடையோர் இல்லாத தொல்குடி ஊரில் வாழ்வதை விட குறவர் தேன் தேடித் திரியும் மலைகளில் வாழ்வது நன்று....

வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 49 - 57

 49. குடைநிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந்து ஓர்ஊர் நண்ணினும் நண்ணுவர் யானை மீது வெண்கொற்றக் குடையின் கீழ் வலம் வந்த மன்னர்களும் நிலை தாழ்ந்து நடந்தே ஊர் கடந்து போகக்கூடும். 50. சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர் அறக்கூழ் சாலை அடையினும் அடைவர் பேரும் பெருமையும் மிக ஊரில் வாழ்ந்தவரும் ஒருவாய்க் கூழுக்காக அன்னசத்திரத்திற்குச் செல்லும் நிலை வரக்கூடும். 51. அறத்திடு பிச்சை கூவி இரப்போர் அரசோடு இருந்துஅரசு ஆளினும் ஆளுவர் முகமன் கூறி மக்களிடம் இரந்து வாழ்ந்தவரும் அரசனோடு அமர்ந்து ஆட்சி செய்யக்கூடும். 52. குன்றத் தனைஇரு நிதியைப் படைத்தோர் அன்றைப் பகலே அழியினும் அழிவர் என்றும் குறையாத சங்க, பதும நிதிகளைச் சேர்த்து வைத்தோரும் ஒரே நாள் பொழுதில் தடமின்றி அழியக்கூடும். 53. எழுநிலை மாடம் கால்சாய்ந் துக்குக் கழுதை மேய்பாழ் ஆயினும் ஆகும் அடுக்குமாட மாளிகையும் ஒருநாள் தரைமட்டமாகிக் கழுதை மேயும் பாழ்நிலமாக மாறக்கூடும். 54. பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப்பாழ் பொற்கொடி மகளிரும் மைந்தரும் கூடி நெற்பொலி நெடுநக ராயினும் ஆகும் எருதும் கழுதையும் மேயும் அந்தப் பாழ்நிலமும் ஒருநாள் பெண்டிரும் அவ...

வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 39 - 48

 39. அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும் கற்றோரை மன்னர் முதல் மக்கள் வரை எல்லோரும் நேசிப்பார்கள் 40. யானைக்கு இல்லை தானமும் தருமமும் காட்டின் அரசனாகிய களிறுக்கு தானமளிப்பவர் இந்த இயற்கையைத் தவிர வேறு யாரும் இல்லை. 41. பூனைக்கு இல்லை தவமும் தயையும் சர்வ பட்சிணியாகிய பூனைக்கு ஒழுக்கமும், கருணையும் இயல்பிலேயே பொருட்டல்ல.. 42. ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும் இகவுலக சுகங்களைத் துறந்த துறவிக்கு இன்பமும் துன்பமும் பொருட்டல்ல. 43. சிதலைக்கு இல்லை செல்வமும் செருக்கும் மரத்தை அண்டிப் பிழைத்து உயிர்வாழும் கரையானுக்கென தனியாக எந்த சொத்தும், செருக்கும் இருக்க முடியாது. 44. முதலைக்கு இல்லை நீத்தும் நிலையும் கொடூர வேட்டையாடும் முதலைக்கு நீரின் ஆழமோ, ஓட்டமோ ஒரு பொருட்டல்ல. 45. அச்சமும் நாணமும் அறிவிலோர்க்கு இல்லை மூடருக்கு உலகத்திடம் அச்சமோ, அறிவாரிடம் நாணமோ இருக்காது. 46. நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை உணவில்லா வறியவர்க்கு நல்ல நாளும், கிழமையும் தேவையில்லை. 47. கேளுங் கிளையும் கெட்டோர்க்கு இல்லை மதி கெட்ட மூடருக்கு நட்பும், சுற்றமும் நிலைத்திருக்காது. 48. உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா ச...