இடுகைகள்

உலக நீதி - உலகநாதர் - பாடல் 10

 10. மறம்பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்              வம்புக்கு அலைபவரோடு இணக்கம் கொள்ளாதே           வாதாடி வழக்கழிவு சொல்ல வேண்டாம்              பொ துமேடையில் பொய் வழக்கு உரைக்காதே           திறம்பேசிக் கலகமிட்டுத் திரியவேண்டாம்              தற்பெருமை பேசி வம்பிழுத்து அலையாதே           தெய்வத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்              படைத்தவனை எந்நாளும் மறவாதே           இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்                கொன்றாலும் பொய் வார்த்தை உரைக்காதே           ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்                இகழ்ச்சி செய்த உறவுகளை விரும்பிச் செல்லாதே         ...

உலக நீதி - உலகநாதர் - பாடல் 9

9. மண்ணின்று மண்ணோரம் சொல்ல வேண்டாம்           பிறந்த பொன்நாட்டைப் பகடி செய்யாதே      மனம்சலித்துச் சிலுக்கிட்டுத் திரிய வேண்டாம்           கோபத்தில் கொந்தளித்துத் திரியாதே      கண்ணழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம்           பிறரை அழ வைத்து இன்பம் காணாதே      காணாத வார்த்தையைக்கட் டுரைக்க வேண்டாம்           இல்லாத விஷயத்தை இருப்பதாக இயம்பாதே      புண்படவே வார்த்தைதனைச் சொல்ல வேண்டாம்           பிறரை நோகடிக்கும் சொற்களைச் சொல்லாதே      புறம்சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்           கோள் மூட்டித் திரிவாரோடு தோள் சேராதே      மண்ணளந்தான் தங்கைஉமை மைந்தன் எங்கோன்      மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே           வாமன ரூபன் சோதரி பார்வதிப் புதல்வனாம் என் அரசன் மயில்வாகனனை வாழ்த்த...

உலக நீதி - உலகநாதர் - பாடல் 8

8. சேராத இடந்தனிலே சேர வேண்டாம்      பொல்லாதோர் சகவாசம் எந்நாளும் கொள்ளாதே செய்தநன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்      உதவிசெய்த சான்றோரை ஒருபோதும் மறக்காதே ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்      யாரோடும் புறம்பேசித் திரியாதே உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்      சுற்றத்தை குறையொன்றும் சொல்லாதே பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்      புகழ்தரும் செயலைச் செய்யத் தயங்காதே பிணைப்பட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம்      யாருக்கும் அடிமையாய் இருக்காதே வாராருங் குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே      பெருமைமிகு குறமகள் வள்ளி மணவாளன் மயில்வாகனன் பெருமையை வாழ்த்து என்                நெஞ்சே

உலக நீதி - உலகநாதர் - பாடல் 7

7.      கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்           பின்விளைவுகளை யோசிக்காமல் எதையும் செய்யாதே      கணக்கழிவை ஒருநாளும் பேச வேண்டாம்           தீயவை நிகழும் என எதிர்மறையாகப் பேசாதே      பொருவார்தம் போர்க்களத்திற் போக வேண்டாம்           நடந்த கொண்டிருக்கும் சண்டையில் மூக்கை நுழைக்காதே      பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்           உனக்குச் சொந்தமில்லாத இடத்தில் குடிபுகாதே      இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்           மனையாளிருக்கத் துணையருத்தியைத் தேடாதே      எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்           உன்னில் எளியவரோடு பகை கொள்ளாதே      குருகாரும் புனங்காக்கும் ஏழை பங்கன்      குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே           புள் மேயும் கொல்லை காக்கும் ஏழைப...

உலக நீதி - உலகநாதர் - பாடல் 6

6. வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத் திரிய வேண்டாம்           பசப்பு மொழி பேசுபவருடன் பழகித் திரியாதே      மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்           தன்னோடு உன்னைச் சமமாக எண்ணாதார் இல்லம் புகாதே      மூத்தோர்சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்           முன்னோரின் அறிவுரையை மீறி நடக்காதே      முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்           முன்கோபிகள் நட்பால் பின்விளைவுகளைச் சந்திக்காதே      வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்           கற்றறிவித்தவரிடம் கடன் வைத்துப் பழகாதே      வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்           திருடர்களோடு சகவாசம் வைத்துக் கொள்ளாதே      சேர்த்த புகழாளனொரு வள்ளி பங்கன்      திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே           அகிலம் புகழ் வள்ளி மணவாளன்,...

உலக நீதி - உலகநாதர் - பாடல் 5

 5. வாழாமல் பெண்ணைவைத்துத் திரிய வேண்டாம்           மணம் முடிக்காமல் மங்கையுடன் மனை புகாதே      மனையாளைக் குற்றமொன்றும் சொல்ல வேண்டாம்           இல்லாளை வன்சொல்லால் பழிக்காதே      வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்           நீயாகத் தெரிந்து போய் துன்பச் சேற்றில் சிக்காதே      வெஞ்சமரில் புறங்கொடுத்து மீள வேண்டாம்           சண்டையில் புறமுதுகு காட்டித் தப்பிக்காதே      தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்           தீமை செய்வாரோடு இணக்கம் கொள்ளாதே      தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்           உன்னை அண்டி இருப்பவரை வஞ்சினம் கொண்டு வையாதே      வாழ்வாருங் குறவருடைய வள்ளி பங்கன்      மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே           செல்வக் கடவுள் குறவள்ளி மணவாளன் மயில்வாகன முருகன...

உலக நீதி - உலகநாதர் - பாடல் 4

 4. குற்றமொன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்           அடுத்தவரைக் குறை சொல்லித் திரியாதே      கொலைகளவு செய்வாரோடு இணங்க வேண்டாம்           தீயோருடன் நட்பு பாராட்டி வாழ்க்கையை வீணாக்காதே      கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்           கல்வி கற்றோரிடம் எப்போதும் காழ்ப்பு கொள்ளாதே      கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்           நற்குலப் பெண்டீரை மணம் கொள்ள நினைக்காதே      கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்           ஆட்சியில் இருக்கும் அரசனை எதிர்த்துப் பேசாதே      கோயில்இல்லா ஊரில்குடி இருக்க வேண்டாம்           இறைவீடு இல்லாத இடத்துக்கு இடம்பெயராதே      மற்றுநிகர் இல்லாத வள்ளி பங்கன்      மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே           ஒப்பில்லாக் குறவள்ளி மணவாளன் மயில்வாகன ...