உலக நீதி - உலகநாதர் - பாடல் 10

 10. மறம்பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்

           வம்புக்கு அலைபவரோடு இணக்கம் கொள்ளாதே

        வாதாடி வழக்கழிவு சொல்ல வேண்டாம்

          பொதுமேடையில் பொய் வழக்கு உரைக்காதே

        திறம்பேசிக் கலகமிட்டுத் திரியவேண்டாம்

           தற்பெருமை பேசி வம்பிழுத்து அலையாதே

        தெய்வத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்

           படைத்தவனை எந்நாளும் மறவாதே

        இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

            கொன்றாலும் பொய் வார்த்தை உரைக்காதே

        ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்

            இகழ்ச்சி செய்த உறவுகளை விரும்பிச் செல்லாதே

        குறம்பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்

        குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே

            குறி சொல்லி வாழும் வள்ளி மணவாளன் உலகவேந்தன் குமரன் பெயரைக் கூறாயோ             என் நெஞ்சே

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 1 - 10

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 11 - 14

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 27 - 30