உலக நீதி - உலகநாதர் - பாடல் 5

 5. வாழாமல் பெண்ணைவைத்துத் திரிய வேண்டாம்

        மணம் முடிக்காமல் மங்கையுடன் மனை புகாதே

    மனையாளைக் குற்றமொன்றும் சொல்ல வேண்டாம்

        இல்லாளை வன்சொல்லால் பழிக்காதே

    வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்

        நீயாகத் தெரிந்து போய் துன்பச் சேற்றில் சிக்காதே

    வெஞ்சமரில் புறங்கொடுத்து மீள வேண்டாம்

        சண்டையில் புறமுதுகு காட்டித் தப்பிக்காதே

    தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்

        தீமை செய்வாரோடு இணக்கம் கொள்ளாதே

    தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

        உன்னை அண்டி இருப்பவரை வஞ்சினம் கொண்டு வையாதே

    வாழ்வாருங் குறவருடைய வள்ளி பங்கன்

    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

        செல்வக் கடவுள் குறவள்ளி மணவாளன் மயில்வாகன முருகனை மட்டும் வாழ்த்திப் பாடு         என் நெஞ்சே

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 1 - 10

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 11 - 14

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 27 - 30