உலக நீதி - உலகநாதர் - பாடல் 9

9. மண்ணின்று மண்ணோரம் சொல்ல வேண்டாம்

        பிறந்த பொன்நாட்டைப் பகடி செய்யாதே

    மனம்சலித்துச் சிலுக்கிட்டுத் திரிய வேண்டாம்

        கோபத்தில் கொந்தளித்துத் திரியாதே

    கண்ணழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம்

        பிறரை அழ வைத்து இன்பம் காணாதே

    காணாத வார்த்தையைக்கட் டுரைக்க வேண்டாம்

        இல்லாத விஷயத்தை இருப்பதாக இயம்பாதே

    புண்படவே வார்த்தைதனைச் சொல்ல வேண்டாம்

        பிறரை நோகடிக்கும் சொற்களைச் சொல்லாதே

    புறம்சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்

        கோள் மூட்டித் திரிவாரோடு தோள் சேராதே

    மண்ணளந்தான் தங்கைஉமை மைந்தன் எங்கோன்

    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

        வாமன ரூபன் சோதரி பார்வதிப் புதல்வனாம் என் அரசன் மயில்வாகனனை வாழ்த்து என் நெஞ்சே

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 1 - 10

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 11 - 14

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 27 - 30