உலக நீதி - உலகநாதர் - பாடல் 7
7. கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்
பின்விளைவுகளை யோசிக்காமல் எதையும் செய்யாதே
கணக்கழிவை ஒருநாளும் பேச வேண்டாம்
தீயவை நிகழும் என எதிர்மறையாகப் பேசாதே
பொருவார்தம் போர்க்களத்திற் போக வேண்டாம்
நடந்த கொண்டிருக்கும் சண்டையில் மூக்கை நுழைக்காதே
பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
உனக்குச் சொந்தமில்லாத இடத்தில் குடிபுகாதே
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
மனையாளிருக்கத் துணையருத்தியைத் தேடாதே
எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
உன்னில் எளியவரோடு பகை கொள்ளாதே
குருகாரும் புனங்காக்கும் ஏழை பங்கன்
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே
புள் மேயும் கொல்லை காக்கும் ஏழைப் பங்காளன் அரச குமரன் பாதத்தைப் பணி என் நெஞ்சே