உலக நீதி - உலகநாதர் - பாடல் 8
8. சேராத இடந்தனிலே சேர வேண்டாம்
பொல்லாதோர் சகவாசம் எந்நாளும் கொள்ளாதே
செய்தநன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
உதவிசெய்த சான்றோரை ஒருபோதும் மறக்காதே
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
யாரோடும் புறம்பேசித் திரியாதே
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
சுற்றத்தை குறையொன்றும் சொல்லாதே
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
புகழ்தரும் செயலைச் செய்யத் தயங்காதே
பிணைப்பட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம்
யாருக்கும் அடிமையாய் இருக்காதே
வாராருங் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
பெருமைமிகு குறமகள் வள்ளி மணவாளன் மயில்வாகனன் பெருமையை வாழ்த்து என் நெஞ்சே