உலக நீதி - உலகநாதர் - பாடல் 4

 4. குற்றமொன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்

        அடுத்தவரைக் குறை சொல்லித் திரியாதே

    கொலைகளவு செய்வாரோடு இணங்க வேண்டாம்

        தீயோருடன் நட்பு பாராட்டி வாழ்க்கையை வீணாக்காதே

    கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்

        கல்வி கற்றோரிடம் எப்போதும் காழ்ப்பு கொள்ளாதே

    கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்

        நற்குலப் பெண்டீரை மணம் கொள்ள நினைக்காதே

    கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்

        ஆட்சியில் இருக்கும் அரசனை எதிர்த்துப் பேசாதே

    கோயில்இல்லா ஊரில்குடி இருக்க வேண்டாம்

        இறைவீடு இல்லாத இடத்துக்கு இடம்பெயராதே

    மற்றுநிகர் இல்லாத வள்ளி பங்கன்

    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

        ஒப்பில்லாக் குறவள்ளி மணவாளன் மயில்வாகன முருகனை மட்டும் வாழ்த்திப் பாடு என்         நெஞ்சே

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 1 - 10

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 11 - 14

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 27 - 30