ஆத்திசூடி - ஔவையார் - 101-108


ஆத்திசூடி - ஔவையார் - 13ஆம் நூற்றாண்டு நீதிநூல்


நவீனப் பொழிப்புரை


வீடு பெற நில்


யாருக்கும் அடிமையாய் இராதே. உன் சுதந்திரத்தை எப்போதும் பாதுகாத்து வைத்திரு.


உத்தமனாய் இரு


உடல், உள்ளம், செயலில் மிகத் தூயவனாக இரு.


ஊருடன் கூடி வாழ்


எல்லோரிடமும் அனுசரித்து வாழப் பழகு. மேட்டிமைத்தனம் காட்டாதே.


வெட்டேனப் பேசேல்


யாரையும் எடுத்தெறிந்து பேசாதே. தன்மையாகப் பேசு.


வேண்டி வினைசெயேல்


பலனை எதிர்பார்த்து ஒரு செயலைச் செய்யாதே. செயலின்பதுக்காகச் செயல் செய்.


வைகறைத் துயிலெழு


அதிகாலையில் தூக்கம் விட்டெழு.


ஒன்னாரைத் தேறேல்


உன் தன்மைக்கு இணங்காதவரை நட்பு பாராட்டத் தேர்ந்தெடுக்காதே. 


ஓரம் சொல்லேல்


புறம் பேசாதே.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வெற்றி வேற்கை - அதிவீரராம பாண்டியர் - 1 - 10

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 11 - 14

திருமூல ஔவையார் பாடிய நல்வழி - 27 - 30