ஆத்திசூடி - ஔவையார் - 61-75
ஆத்திசூடி - ஔவையார் - 13ஆம் நூற்றாண்டு நீதிநூல்
நவீனப் பொழிப்புரை
தெய்வம் இகழேல்
விதியைப் பழித்துப் பேசாதே. இறைவன் வகுத்ததை ஏற்றுக் கொள்வதே நெறி.
தேசத்தோடு ஒத்து வாழ்
அண்டை நாட்டினரோடு நட்பு பாராட்டு. அவர்களுடன் சண்டையிடாதே.
தையல் சொல் கேளேல்
புனைந்து சொல்லப்படும் கருத்துகளைச் செவிமடுக்காதே. உண்மையை ஆராய்ந்து பார்த்து ஏற்றுக் கொள்.
தொன்மை மறவேல்
நீ பிறந்த தேசம், குடி, மொழி ஆகியவற்றின் தொல்பெருமையை ஒருபோதும் மறக்காதே.
தோற்பன தொடரேல்
நீ செய்யும் முயற்சி தொடர்ந்து தோல்வியடைந்தால், அதைச் சற்று இடைநிறுத்து. தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து தெளிந்த பின் மீண்டும் சரியான முறையில் தொடங்கு.
நன்மை கடைபிடி
நற்செயல்களைச் செய்வதை விட்டுவிடாதே. தொடர்ந்து செய்.
நாடு ஒப்பன செய்
நாட்டிலுள்ளோர் ஏற்கக்கூடிய செயல்களையே செய். ஊராருக்கு எதிராக எதையும் செய்யாதே.
நிலையிற் பிரியேல்
கொண்ட கொள்கையில் உறுதியாக இரு.
நீர் விளையாடேல்
கடலில் நீந்தி விளையாடாதே (அதா.) வாழ்க்கை என்னும் கடலில் விளையாட்டுத்தனமாக இறங்காதே.
நுண்மை நுகரேல்
எதையும் மிகுதியாக உண்ணாதே, அருந்தாதே. எதையும் அளவோடு ருசி.
நூல் பல கல்
மூத்தோர் இயற்றிய சாத்திரங்களைக் கற்றுக் கொள்.
நெற்பயிர் விளை
உழவைத் தொழிலாகக் கொண்டு வாழ்.
நேர்பட ஒழுகு
எதையும் ஒரு நோக்கத்தோடு செய். நோக்கமின்றி எதையும் செய்யாதே.
நைவினை நணுகேல்
தீவினைகளை உன்னிடத்தில் அண்ட விடாதே. தீயவற்றை தூர விலக்கு.
நொய்ய உரையேல்
கடுமையாகப் பேசாதே. மென்மையாகப் பேசிப் பழகு.