உலக நீதி - உலகநாதர் - பாடல் 2
2. நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
மனமறிந்து உண்மை அல்லாததைப் பேசாதே
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
உன் பெயரை நிலைக்க வைக்காத காரியத்தைச் செய்யாதே
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
மனதில் வெஞ்சினத்தோடு யாருடனும் பழகாதே
நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
ஒத்துப் போகாதவருடன் நட்பு கொள்ளாதே
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
தனித்துச் செல்லும்போது அசட்டுத் துணிச்சல் காட்டாதே
அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்
பிறருக்கு எப்போதும் தீங்கு நினைக்காதே
மஞ்சாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
வலிமைமிகுக் குறவள்ளி மணவாளன் மயில்வாகன முருகனை மட்டும் வாழ்த்திப் பாடு என் நெஞ்சே