உலக நீதி - உலகநாதர் - பாடல் 3
3. மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மனம் போல வாழ நினைத்து மாட்சிமை குறையாதே
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
அயலானை உற்றானென்று உறவு கொண்டாடாதே
தனம்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
பணம் சேர்க்கும் ஆசையில் பட்டினி கிடக்காதே
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
மறுமைக்குச் செல்வமான தானதருமத்தை மறக்காதே
சினந்தேடி அல்லலையும் தேட வேண்டாம்
கோபத்தால் துன்பத்தை உருவாக்கிக் கொள்ளாதே
சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்
கோபக்காரன் வாழும் வீட்டுவழியில் செல்லாதே
வனந்தேடும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
வேட்டைக் குலக் குறவள்ளி மணவாளன் மயில்வாகன முருகனை மட்டும் வாழ்த்திப் பாடு என் நெஞ்சே